தற்காலிக சபாநாயகராக செம்மலை தேர்வு

சனி, 21 மே 2016 (21:47 IST)
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் 134 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
 
 
இதனையடுத்து, புதிய அமைச்சரவை பட்டியலை  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், ஜெயலலிதா உள்பட 29 பேர் இடம் பெற்றுள்ளனர்.
 
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செம்மலை, மக்கள் தேமுதிக எஸ்.ஆர்.பார்த்திபனை வீழ்த்தி வெற்றிக்கனியை பறித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்