மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக குத்தாலம் க.அன்பழகன் அறிவிக்கப்பட்டார். இவரை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி தேர்தல் பிரசாரம் செய்து பேசுகையில், குத்தாலம் சட்டமன்ற உறுப்பினராக அன்பழகன் இருந்த பொழுதே மயிலாடுதுறை சட்ட மன்றத் தொகுதிப் பணிகளுக்காக சட்ட மன்றத்தில் பல நலத்திட்டங்களை வாதாடிப் பெற்றவர்.
மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான புதிய பேருந்து நிலையம், சுற்று வட்ட புறவழிச்சாலை, காய்கறி குளிர் பதனக்கிடங்கு ஆகியவை தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று வாக்கு சேகரித்தார்.