விளவங்கோட்டில் பாஜக வெற்றி முகம் - கருத்துக் கணிப்பு

புதன், 4 மே 2016 (02:23 IST)
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் பாஜக வெற்றி முகம் காண உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
 

 
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து, நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
 
இந்த கருத்துக் கணிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில், விளவங்கோடு தொகுதியில் பாஜக வெற்றிக்கனியை பறிக்கும் நிலையில் உள்ளதாம்.
 
விளவங்கோடு தொகுதியில், தற்போது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த விஜயதாரணி சட்ட சபை உறுப்பினராக உள்ளார். அவரே மீண்டும் இந்த தொகுதியில்  போட்டியிடுகிறார். ஆனால் இங்கு அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்