பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் செம்பருத்தி. இத்தொடரை நீராவி பாண்டியன் எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்காக சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணக் காட்சி ஒன்று படம் பிடித்துக் கொண்டிருந்த போது அவர் மைக்கில் துணை நடிகைகளை ஆபாசமாக அவர் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தியான 15க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் அங்கிருந்து வெளியேறி திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் வந்து இயக்குனரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். போலிஸுக்கும் நீராவி பாண்டியனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதுஅப்போது துணை நடிகைகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இயக்குனர் தங்களிடம் மன்னிப்புக் கேட்டால்தான் வழக்கை வாபஸ் பெறுவோம் என சொல்லியுள்ளனர். இதையடுத்து இயக்குனர் மைக்கில் துணை நடிகைகளை திட்டியது போலவே மன்னிப்புக் கேட்டதை அடுத்து பிரச்சனை முடிந்தது.