தஞ்சை குடமுழுக்கு விழா: பிரபல இயக்குனர் கைது!

புதன், 5 பிப்ரவரி 2020 (08:32 IST)
தஞ்சை பெரிய கோவிலில் இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை குடமுழுக்கு விழாவில் தமிழில் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இயக்குனர் கௌதமன் போராட்டம் செய்ய தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் தஞ்சை அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளி என்ற பகுதியில் இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டார். அவருடன் மோகனசுந்தர அடிகள், ரகுநாதன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தஞ்சையில் சமஸ்கிரத மொழியில் குடமுழுக்கு விழா மந்திரம் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கௌதமன் உள்பட ஒருசில உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெளிவந்துள்ள செய்தி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
முன்னதாக தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் இயக்குனர் கௌதமன் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தஞ்சையில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு செய்யலாம் என சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்