ஒரே ஒரு லவ்.. அதுக்கு வேர்ல்ட் வாரே வந்துடும்போல.. சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ டிரைலர்

திங்கள், 10 அக்டோபர் 2022 (08:01 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
நேற்று சென்னையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் சிவகார்த்தியன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்
 
இந்த படத்தின் டிரைலர் சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ளது என்றும் இந்த டிரைலரில் இருந்து இந்த படம் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை அலசுகிறது என்பதும் தெரிய வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கலந்து இயக்குனர் இந்த படத்தை கொடுத்து உள்ளார். இந்த படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் அடுத்த வெற்றிப் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.
 
 


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்