முதல் 100 கோடி வியாபாரம்… சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் சாதனை!

சனி, 8 அக்டோபர் 2022 (09:05 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் முடிந்து அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியோபாஷாப்கா நடிக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தை சமீபத்தில் பார்த்த படக்குழு, கிளைமேக்ஸ் காட்சியில் முழு திருப்தி இல்லாததால் மீண்டும் சில காட்சிகளை படமாக்கியுள்ளார்களாம். தீபாவளிப் பண்டிகை திங்கள் கிழமை வருவதால் இந்த படம் 3 நாட்கள் முன்பாக அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரிய அளவில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்