மேயாத மான்' பட டீசர் வெளியீடு!

திங்கள், 31 ஜூலை 2017 (17:34 IST)
பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' உள்ளிட்ட படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு  நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'.

  
ரத்தின குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா ஷங்கர் நடித்துள்ளனர்.  கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' தற்போது தமிழ் திரையுலகிலும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.
 
இப்படத்துக்கு விது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்கள்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்