’அவங்களுக்கு முன்னாடி நீ புடிச்சிட்ட.. நீதான் நேஷனல் டிரெண்டிங்: சர்தார் டிரைலர்

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (20:23 IST)
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த படத்தின் புரமோஷன் பணியை கடந்த சில நாட்களாக படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது
 
இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் முழுக்க முழுக்க அடங்கியுள்ளதை அடுத்து ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
போலீஸ் மற்றும் உளவாளி என இரண்டு வித்தியாசமான கேரக்டரில் கார்த்தி நடித்து உள்ளார். போலீஸ் கேரக்டருக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்துள்ளார் என்பதும் மற்றொரு முக்கிய கேரக்டரில் ரஜிஷா விஜயன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்