நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வந்த அமலாவின் ‘கணம்’ டீசர்!

புதன், 29 டிசம்பர் 2021 (17:55 IST)
நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வந்த அமலாவின் ‘கணம்’ டீசர்!
கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமான நாயகியாக தமிழ் தெலுங்கு திரையுலகில் வலம் வந்த நடிகை அமலா நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ள திரைப்படம் கணம்
 
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
சர்வானந்த் ,அமலா , சதீஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
டைம் மெஷின் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பது போல் டீசரில் இருந்து தெரிய வருகிறது
 
இந்த படத்தை ஸ்ரீகார்த்தி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார் என்பதும் சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஸ்ரீதரன் சரங் படத்தொகுப்பு பணி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்