அருண்விஜய்யின் ‘யானை’ படத்தின் டீசர்!

வியாழன், 23 டிசம்பர் 2021 (17:12 IST)
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் அந்த டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இந்த டீசரில் இறுதியில் இவருக்கு தூக்கி சுமக்கவும் தெரியும் தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும் என்ற வசனத்தில் இருந்து இந்த படம் செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் ஆகிய இரண்டும் கலந்து இருக்கும் என்பது உறுதியாகிறது 
 
ஜீவி பிரகாஷின் பின்னணி இசை டீசரில் அசத்தலாக உள்ளதை அடுத்து படத்திலும் அவர் தனது முழு திறமையை காண்பித்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்