அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை: ஆர்.எஸ்.பாரதி

வியாழன், 23 டிசம்பர் 2021 (17:10 IST)
அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை: ஆர்.எஸ்.பாரதி
 அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறியுள்ளார். 
 
தமிழக அரசு குறித்தும் தமிழக காவல் துறை குறித்தும் டிஜிபி சைலேந்திரபாபு குறித்தும் தரக்குறைவாக பேசியதிலிருந்து அவர் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கவில்லை என்பது தெரிய வருகிறது என்று ஆர்எஸ் பாரதி கூறினார்
 
மேலும் தமிழக பாஜகவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்ணாமலையை நாங்கள் ஒரு மனிதனாகவே கருதவில்லை என்றும் அரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்