மருத்துவர் ஆல்பர்ட் ஜேம்ஸ், அவரது நண்பர் எஸ்.செல்வகுமார் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரும் 22ஆம் தேதி படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்திருந்தனர். ஜே.எஸ்.கே. ஃபிலிம்ஸ் சதீஷ்குமார் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியிருந்தார்.
படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு படத்தை திரையிட்டனர். படத்தைப் பாராட்டியவர்கள், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக முடியாமல் மகிழ்ச்சியாக முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள் சிறப்பாக இருக்கிறது என்று சொன்ன, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனை கருத்தில் கொண்டு படத்தின் கிளைமாக்ஸை மாற்ற உள்ளனர். அதனால் பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது.