சர்தார் 2 படத்தில் இருந்து வெளியேறுகிறாரா யுவன் ஷங்கர் ராஜா?

vinoth

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (11:26 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதனால் இப்போது சர்தார் 2 படம் தொடங்கியுள்ளது. படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்குள் பல முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் படமாக்கவுள்ளாராம். படம் வெளியாகும் போது இதில் படமாக்கப்படும் காட்சிகள் பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

முதல் பாகத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்