யோகிபாபுவின் ‘மண்டேலா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெள்ளி, 12 மார்ச் 2021 (20:27 IST)
யோகிபாபுவின் ‘மண்டேலா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவ்வாறு ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று மண்டேலா என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் யோகிபாபு ஜோடியாக ஷீலா என்பவர் நடித்துள்ளார் இவர் அழகிய தமிழ் மகள்’ என்ற சீரியலில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த என்பதும், அதுமட்டுமின்றி ’டூலெட்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் நாளை இந்த படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
அஸ்வின் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் என்பவர் இசையமைத்துள்ளார் விது அய்யண்ணா என்பவர் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்