யோகி பாபுவின் லக்கி மேன் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:38 IST)
யோகி பாபு சமீபத்தில் நடித்த பொம்மை நாயகி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் லக்கிமேன் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்