மே மாதத்தில் இந்தியன் 2 ரிலீஸ்… இரண்டு தேதிகளை முடிவு செய்த படக்குழு!

vinoth

ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (11:36 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகள்  5 மணிநேரத்துக்கு மேல் வந்ததால் இப்போது படத்தை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளனர். முதலில் இந்தியன் 3 படம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நாளில் இந்தியன் 3 திரைப்படம் பற்றி கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டது என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு பாடல் காட்சியை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பாடலில் கமல்ஹாசன் நடிக்கப் போவதில்லையாம். சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் பாடலை நாளை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை மே மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதம் 16 ஆம் தேதி அல்லது மே 30 ஆம் தேதி இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்