நெருங்கிய நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய யாஷிகா - வைரலாகும் பர்த்டே பார்ட்டி வீடியோ!

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (18:41 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா இன்று தனது 21 வது பிறந்தநாளை நெருங்கிய தோழியும் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா , தம்பி ராமையாவின் மகன் உமாபதி மற்றும் சில ஆண் நண்பர்கள் கலந்துகொண்டு 5 விதமான கேக் வெட்டி பிறந்தநாள் பார்ட்டியை மஜாவாக கொண்டாடினர். இதில் யாஷிகா செம கவர்ச்சியாக தெரியும்படி கிளாமர் உடை அணிந்திருந்தார். இந்த பர்த்டே பார்ட்டி  வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்