இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.
சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்தன.
சிகிச்சையில் குணமான அவர் இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் கடமையை செய் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. வழக்கமான கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்களுக்கு பதிலாக இந்த புகைப்படங்களில் ஹோம்லி லுக்கில் தோன்றியுள்ளார்.