கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார். கேஜிஎப் கதையை அவர் நடிகர் பிரபாஸை மனதில் வைத்துதான் எழுதினாராம். ஆனால் அப்போது பிரபாஸ் பாகுபலி பணிகளில் பிஸியாக இருந்ததால் அவரை அனுக முடியவில்லையாம். அதன் பின்னர்தான் யாஷ் கேட்டு நடிக்க சம்மதித்தாராம். ஆனால் அப்போது சேரமுடியாத கூட்டணி இப்போது சலார் படத்தின் மூலம் இணைந்துள்ளது.