யானை படத்தின் தெலுங்கு தலைப்பு இதுதான்… டீசர் வெளியீடு… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திங்கள், 13 ஜூன் 2022 (12:58 IST)
அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அருண் விஜய் முதல் முறையாக அவருடைய அக்கா கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார்.

இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியாலும், இன்னமும் பல திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதாலும், அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் யானை படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷனுக்கு ’எனுகு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கு டீசர் வெளியானது. இதையடுத்து தெலுங்கு பதிப்பு ஜுலை 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழிலும் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்