ரைட்டர் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிப்பு!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:52 IST)
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய படம் “ரைட்டர்”. இந்த படத்தில் நாயகனாக இயக்குனர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் இடையே அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்