விஜய் பிறந்தநாளில் தளபதி 65 பர்ஸ்ட் லுக்?

வெள்ளி, 18 ஜூன் 2021 (13:04 IST)
விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி அவர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இன்னும் நான்கு நாட்களில் விஜய்யின் பிறந்தநாள் வர உள்ள நிலையில் அதை முன்னிட்டு தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்