இயக்குனர் கதிர் இயக்கிய இதயம், காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்கள் 90களில் இளைஞர்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் காதல் வைரஸ் திரைப்படம் தோற்றதை அடுத்து அவரால் தொடர்ந்து படங்கள் இயக்க முடியவில்லை. இதையடுத்து இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. அந்த படத்தில் கதாநாயகனாக கிஷோர் என்பவர் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கு வழக்கம் போல தனது ஆஸ்தான இசையமைப்பாளரையே அனுகியுள்ளாராம் கதிர். இவர்கள் கூட்டணியில் உருவான காதல் தேசம் மற்றும் காதலர் தினம் ஆகிய படங்களின் பாடல்கள் இன்றும் இளைஞர்களின் பேவரைட்டில் லிஸ்ட்டில் உண்டு. அந்த வகையில் ரஹ்மான் மீண்டும் கதிரின் இயக்கத்தில் நடிப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.