விஜய் இதுக்கெல்லாம் வாய திறக்கமாட்டாரா? நடுநிலையாளர்கள் சரமாரி கேள்வி

செவ்வாய், 13 நவம்பர் 2018 (08:39 IST)
வன்முறையில் ஈடுபடும் ரசிகர்களை தடுக்க விஜய் என்ன நடவடிக்கை எடுத்தார் என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் இருந்தது இதைத் தொடர்ந்து அதிமுகவினர் விஜய் ரசிகர்கள் வைத்த சர்கார் படத்தின் பேனரை கிழித்தும், சர்கார் படம் ஓடும் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியும் ரௌடிதனம் பண்ணினர்.
 
இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டு படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
இதில் ஹைலைட் என்னவென்றால் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக ஒருபுறம் படத்தில் வீரவசனம் பேசி ஒரு வாரத்தில் நன்றாக கலெக்‌ஷன் அள்ளிவிட்டனர் படக்குழுவினர். இந்த படத்திற்கு புரோமோஷன் செய்ததில் அதிமுகவினருக்கு பெரிய பங்கு உண்டு.
 
பின்னர் அதிமுகவினரின் மிரட்டலுக்கு அடிபணிந்து படத்திலிருந்த சர்ச்சைக் காட்சிகளை நீக்கிவிட்டனர் படக்குழுவினர்.
 
இவர்கள் இருவரும் விளையாடிய இந்த விளையாட்டில் முட்டாளாக்கப்பட்டது மக்களாகிய நாம் தான். படத்தில் இலவசங்கள் வேண்டாம் என்று விஜய் பேசிய வீரவசனத்தைக் கேட்டு பல ஆர்வக் கோளாறுகள் தங்கள் வீட்டிலிருந்த மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை தூக்கி போட்டு உடைத்தனர்.

 
சில வடிகட்டின முட்டாள்கள் ஒரு படி மேலே போய் லேப்டாப், அம்மா வீடு போன்றவற்றை சேதப்படுத்த துவங்கிவிட்டனர்.
 
இது ஒருபுறம் இருக்க விஜய் ரசிகர்கள் இருவர் வெளியிட்ட வீடியோவில் அதிமுக காரனுங்க நாங்க இல்லாத நேரமா பார்த்து பேனரை கிழிச்சு போட்டிருக்கிங்க. நாளை காசி தியேட்டர்ல மறுபடியும் பேனர் வைக்கிறேன். எவனாவது  காசி தியேட்டர் கிட்ட வாங்கடா! அப்படி வந்தீங்கன்னா நாங்க பேச மாட்டோம், எங்க அருவாதான் பேசும் என வீரவசனம் பேசியிருந்தார். அவர்களை தற்பொழுது போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் போலீஸிடம் மாட்டப்போகிறார்கள். அவர்களுக்கு ஆப்பு ரெடியாக இருக்கிறது. இதில் படக்குழுவினருக்கோ, விஜய்க்கோ எந்த பாதிப்பும் இல்லை.
 
படத்தில் அரசியல் பேசுவதை கூட தடுப்பது இந்த அரசின் உச்சகட்ட அராஜகம் என்றாலும் கூட விஜய் ரசிகர்கள் இவ்வாறு கொலை மிரட்டல் விடுப்பதும் அராஜகம் தான்.
 
இப்பட பிரச்சனையின் போது விஜய் பேசாமல் இருந்தது சரி என்றாலும் தற்பொழுது அவரின் ரசிகர்கள் பண்ணும் வன்முறையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் விஜய்? படத்தில் மட்டும் வீரவசனம் பேசும் விஜய் ஏன் தன் ரசிகர்களை இவ்வாறு செய்ய வேண்டாம் என கூற மாட்டிங்கிறார்? என நடுநிலையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்