இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆரவாரமான வரவேற்புக் கிடைத்த நிலையில் அதன் பின்னர் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எந்த திரையரங்கும் பாதி இருக்கைகளை கூட தாண்டவில்லையாம். மேலும் பல திரைகளில் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே டிக்கெட்கள் விற்பனை ஆனதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் ஜாதகப்படி அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் தோல்வியடையும் என உள்ளதாகவும், அதனால்தான் ஏற்கனவே ப்ளாப் ஆன பாபா படத்தை ரி ரிலீஸ் செய்ததாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஜாதகம், ஜோதிடம் ஆகியவற்றின் மீது அபாரமான நம்பிக்கை உண்டென்பது குறிப்பிடத்தக்கது.