லட்சுமி என்கிற குறும்படம் மிகவும் பிரபலமாகியுள்ளது. கள்ளத்தொடர்பை பற்றி இந்த குறும்படம் நியாயப்படுத்துகிறதா என்று ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை ட்விட்டரில் #Lakshmishortfilm #லஷ்மி என்ற ஹேஷ்டேக் போட்டு விவாதிக்கிறார்கள்.
சிலர் கணவனும் மனைவியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் #லட்சுமி. ஒரு பெண்ணை ஆண் எப்படி பார்க்கிறான் என்பதை சொல்கிறது. ஆனால் பெண்ணை போதையாகவே காட்டுவது ஏன்? என ட்வீட் செய்து வருகின்றனர்.
லட்சுமி குறும்படம் பற்றி ட்விட்டர் விமர்சனங்களில் சில....