ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம் -கமல்ஹாசன்

வெள்ளி, 4 மார்ச் 2022 (22:04 IST)
கிரிக்கெட் உலகின் ஜாம்பாவான் ஷேன் வார்னே மறைவுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஷேன் வார்னே மறைவிற்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம். அவர் நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்