24ம் தேதி வரை வெயிட் பண்ண வேண்டியதில்லை: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

சனி, 22 செப்டம்பர் 2018 (11:21 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரித்துள்ளது.
அக்டோபர் 2ம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் எனசன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைக்கும் விதமாகஅடிக்கடி, சர்கார் படம் குறித்து அப்டேட்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுதலுக்கு இணங்க சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் மட்டும் வருகிற 24ல் முருகதாஸின் பிறந்தநாளுக்கு  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அந்த 24ஆம் தேதி வரை கூட காத்திருக்க முடியாத விஜய் ரசிகர்கள் அப்டேட் எதாவது விடுங்கள் என்று சன்பிக்சர்ஸையும், சிங்கிள் டிராக்கின் பாடலாசிரியர் விவேக்கையும் விடாமல் அன்பு தொல்லை செய்து வந்தார்கள்
 
இதனால் பாடலாசிரியர் விவேக் பாடலின் ஒரு சில வரிகளையாவது வெளியிட
சன்பிக்சர்ஸிடம் பரிந்துரைப்பதாக ரசிகர்களிடம் கூறியுள்ளார். இதனால் பாடலின் சில வரிகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்