இதனை கண்ட சிவகார்த்திகேயன் என்ற ட்விட்டர்வாசி ‘நீங்கள் சாதி வெறி பிடிச்சவரா’ என்று கேள்வி கேட்டார். இதற்கு கடுப்பாகி பதிலளித்த அஞ்சனா, இது நம் பாரம்பரியம்! அதை பின்பற்றுவதில் என்ன தவறு? இது வெறி ஆகிவிடாது. இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் அனைவருக்கும் வேண்டியது அன்பு மட்டும் தான் என்று பதிலளித்துள்ளார்.