ஆனால் மங்கு திசையில் இருக்கும் ஹரியை நம்பியும், இப்போதுதான் வளர ஆரம்பித்த அருண் விஜய்யை நம்பியும் அவ்வளவு தொகை செலவு செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லையாம். அதனால் அந்த படத்திற்கான எந்த வித முன்னேற்றமும் இல்லை என சினிமா வட்டாரத்தில் சொல்ல்ப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த படத்தை அருண் விஜய்யின் நண்பரான இந்தர்குமார் தயாரிக்க முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் அவரே ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது.