ஆம், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு, இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என ஆலோசிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. ஏனென்றால் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.