மறைந்த தயாரிப்பாளருக்கு விஷால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா?

செவ்வாய், 5 ஜனவரி 2021 (16:46 IST)
மறைந்த கே பி பிலிம்ஸ் பாலுவுக்கு நடிகர் விஷால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி ஒரு படத்தை முடித்துத் தருகிறேன் என உறுதி அளித்துள்ளாராம்.

சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ஏற்பாடு செய்திருந்த அஞ்சலிக் கூட்டத்தில் விஷால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளாராம்.

கேபி பிலிம்ஸ் பாலு விஷாலுக்கு சில வருடங்களுக்கு முன்னதாகவே அவரின் முழு சம்பளத்தையும் கொடுத்து ஒரு படம் தயாரிப்பதாக இருந்தாராம். ஆனாலும் அது தள்ளிக் கொண்டே போன நிலையில் இப்போது 6 மாதத்தில் அந்த படத்தை முடித்து தருகிறேன் என தனது மேனேஜர் மூலமாக தெரிவித்துள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்