விஷால், ஆர்யாவின் ‘ எனிமி ’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (17:20 IST)
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ’எனிமி’ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
 
விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
நெருங்கிய நண்பர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் எதிரெதிர் துருவங்களாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
 
சமீபத்தில், தமன் இசையில் ’எனிமி’ படத்தின் 2 வது சிங்கில் Tum Tum என்ற பாடல் வெளியாகி வைரலானது.
 
இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டிருந்த நிலையில் இப்படம் ரிலீஸ் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
 
அதாவது வரும் தீபாவளி (  நவம்பர் 4 ஆம் தேதி) அன்று விஷால் , ஆர்யா,பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. 
 

 

See you in THEATRES this Deepavali

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்