கார்த்தி & அதிதியின் விருமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதன், 7 செப்டம்பர் 2022 (14:26 IST)
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விருமன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12 தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது.

படம் வெளியாகி முதல் வார இறுதியில் மட்டும் வசூல் 30 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என தெரிகிறது. கார்த்தி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாக விருமன் அமைந்துள்ளது. அதையடுத்தும் கடந்த ஒரு மாதமாக சீரான வசூலை செய்து கார்த்தியின் வெற்றிப்பட லிஸ்ட்டில் இணைந்தது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒருமாதம் கழித்து தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்