விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

புதன், 4 மே 2022 (19:41 IST)
விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!
நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் ஒருவர் விமல் என்பதும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான வேட்பாளரான விலங்கு என்ற வெப்தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விமல் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு தெய்வ மச்சான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் என்பவர் இயக்கி வருகிறார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் விமலுடன் முக்கிய வேடத்தில் நடிகர் பாலசரவணன் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது இந்த படம் விமலுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்