அடுத்தடுத்து மோசடி புகார்கள்… நடிகர் விமல் வெளியிட்ட ஆடியோக்கள்!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:02 IST)
நடிகர் விமல் மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

விமல் நடித்த மன்னார் வகையறா என்ற படத்தின் தயாரிப்பின் போது நடிகர் விமல் தயாரிப்பாளர் கோபியிடம் ரூபாய் 5 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு பதிலாக மன்னார் வகையறா படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக அவர் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மன்னார் வகையறா படத்தின் லாபத்தில் பங்கு தராமல், தான் கொடுத்த 5 கோடி ரூபாயும் திருப்பி தரவில்லை என்றும் பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விமல் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர் கோபி புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விமல் கூறியுள்ளதாவது, சிங்காரவேலன் என்பவர் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. எனக்கு தயாரிப்பாளர் கோபி எந்த பணமும் தரவில்லை. போலி ஆவணங்களை தயாரித்து என்னை மோசடி செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். 

இதையடுத்து நேற்று விமல் குரலில் பரவிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் விமல் சிங்கார வேலன் மற்றும் கோபி ஆகிய இருவரின் பணத்தையும் கொடுத்துவிடுவதாகக் கூறியிருந்தார். ஆனால் சற்று நேரத்தில் விமல் வேறொரு ஆடியோவைப் பகிர்ந்தார். அதில் முன்பு வெளியான வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது என்றும், அதை இப்போது தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்