பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மன்னர் வகையறா’. ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாந்தினி தமிழரசன், பிரபு, ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, விமலே சொந்தமாகத் தயாரித்துள்ளார். விமல் நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் ‘மாப்ள சிங்கம்’ படம் ரிலீஸானது. இந்த வருடம் எந்தப் படமும் ரிலீஸாகாத நிலையில், அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார் விமல். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.