சீயான் என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் விக்ரமின் மகன் துருவ், வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்துவிட்டு சமீபத்தில் ஒரு குறும்படத்தையும் உருவாக்கிய நிலையில் தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், நாயகி மற்றும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது