அடம்பிடித்த விக்ரம்பிரபு… பயந்த இயக்குநர்

வியாழன், 27 ஏப்ரல் 2017 (13:49 IST)
தீப்பிடிக்கும் காட்சிகளை ஒரிஜினலாகவே படம்பிடிக்க வேண்டும் என்று விக்ரம்பிரபு அடம்பிடித்ததால், தான் பயந்ததாக இயக்குநர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

 

 
விக்ரம்பிரபு நடிப்பில் அசோக் குமார் இயக்கியுள்ள படம் ‘நெருப்புடா’. ஹீரோயினாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். வடசென்னையில் வாழும் 5 தீயணைப்பு வீரர்களைப் பற்றிய கதை இது. போலீஸ் கதைக்குப் பஞ்சம் இல்லாத தமிழ் சினிமாவில், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் பற்றிய கதையைத் தேர்ந்தெடுத்தாராம் இயக்குநர்.

இந்தப் படத்தில், இரண்டு மிகப்பெரிய தீவிபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளை, கிராபிக்ஸ் பண்ணிக் கொள்ளலாம் என்றாராம் இயக்குநர். ஆனால், ஒரிஜினலாகவே படம்பிடித்தால் தான் தத்ரூபமாக இருக்கும் என்று அடம்பிடித்தாராம் விக்ரம்பிரபு. எனவே, தகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். என்றாலும், படப்பிடிப்பு முடியும்வரை பயந்து கொண்டேதான் இருந்தாராம் இயக்குநர்.

வெப்துனியாவைப் படிக்கவும்