மஹான் திரைப்படம் கண்டிப்பா தியேட்டர் ரிலீஸ்தான்… தயாரிப்பாளர் எடுத்த முடிவு!

புதன், 6 அக்டோபர் 2021 (16:41 IST)
தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மஹான்.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்துவிடலாமா என்று படக்குழுவினர் முதலில் யோசித்தனர். ஆனால் இப்போது என்ன ஆனாலும் திரையரங்கில்தான் வெளியிடுவது என்ற முடிவை எடுத்துள்ளார்களாம். விக்ரம்முக்கு ஒரு ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படமாவது அந்த வெற்றியைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்