விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படம் இன்று அறிவிப்பு?

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:33 IST)
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனத் தகவல் பரவி வருகிறது. 


 

 
அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். மூன்று வேடங்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் பற்றிய பேச்சுகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகின்றன.
 
‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜய்யை இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்கிறார்கள். அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என ஒரு தகவல் உலா வருகிறது.
 
ஆனால், நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, அப்படி ஒரு அறிவிப்பு வர வாய்ப்பில்லை என்கிறார்கள். காரணம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படம் அடுத்த மாத இறுதியில் ரிலீஸாக உள்ளது. மகேஷ் பாபு நடித்துள்ள பெரிய பட்ஜெட் படமான இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் முருகதாஸ். அத்துடன், அந்த அறிவிப்பை இப்போது வெளியிடுவதற்கான தேவையும் இல்லை என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்