அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

Mahendran

திங்கள், 17 ஜூன் 2024 (10:14 IST)
இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல அரசியல்வாதிகள் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்பட பல அரசியல் பிரபலங்கள் நேற்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
 
இந்த நிலைகளில் சமீபத்தில் அரசியல் கட்சிக  தொடங்கிய தளபதி விஜய்யும் தனது சமூக வலைதளத்தில் பத்ரிக் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்க்கையில் கூறி இருப்பதாவது:
 
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.‌
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்