மாஸ்டர் ரிலீஸ் தாமதம்… 2021 ஆம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து!

புதன், 9 செப்டம்பர் 2020 (10:55 IST)
மாஸ்டர் படத்தின் ரிலீஸ் எப்படியும் இந்த ஆண்டு இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய விஜய் முடிவு செய்துள்ளாராம்.

ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆகி இருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம், கொரோனா காரணமாக 5 மாதமாக பெட்டிக்குள் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் 2020 ஆம் ஆண்டு எந்த விஜய் படமும் ரிலீஸ் ஆகாது.

இதனால் அடுத்த ஆண்டு விஜய் தன்னுடைய இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தை விரைவாக தயாரித்து 2021 ஆம் ஆண்டே தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்