விஜய்யால் தாமதம் ஆகும் லோகேஷ் படம்… பின்னணி என்ன?

புதன், 28 டிசம்பர் 2022 (15:01 IST)
விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய், தற்போது குடும்பத்தோடு லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 3 ஆம் தேதிதான் இந்தியா திரும்புகிறாராம்.

அதனால் அதன் பின்புதான் வாரிசு ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்