நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் விஜய்….உதயநிதி டுவீட்

திங்கள், 22 ஜூன் 2020 (16:22 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இன்று 46 வது பிறந்த தினம். ரசிகர்கள் அடுத்து அவரது நடிப்பில் வரவுள்ள மாஸ்டர் படத்தை ஒப்பிட்டு மாஸ்டர் விஜய் என்று அவரைப் புகழ்ந்து ஹேப்பி பர்த்டே விஜய் என்று ஹேஸ்டேக் உருவாக்கி  டுவிட்டரில் டிரெண்டுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும், திமுக இளைஞரணி செயலாளரானுமான உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, ‘’நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay’’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்