எங்கு பார்த்தாலும் தளபதி 66… கடுப்பான விஜய் எடுத்த முடிவு!

புதன், 16 ஜூன் 2021 (15:56 IST)
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் குறித்த தகவல்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதுபற்றி எந்த செய்தியும் வரவேண்டாம் என விஜய் தரப்பு விரும்புகிறதாம்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே. விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த ஹேஷ்டேக் சமீபத்தில் டுவிட்டரில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தெலுங்கு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய்யிடம் நான் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும் தில் ராஜ் தயாரிப்பில் இந்த படத்தை நான் தான் இயக்க இருக்கிறேன் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்ததும் தயாரிப்பாளர் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நெல்சன் படமே முடியாத நிலையில் அடுத்த படம் பற்றி அதிக தகவல்கள் வெளியாவது விஜய் தரப்புக்கு பிடிக்கவில்லையாம். அதனால் 65 ஆவது படம் முடியும்போது அடுத்த படத்தை பற்றி பேசிக்கொள்ளலாம் என மூட்டைக் கட்டி வைத்துவிட்டார்களாம்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்