ஆங்கர் டிடி-யை ஓங்கி அறைந்த விஜய் டிவி பிரபலம் - வைரல் வீடியோ!

வியாழன், 2 ஜூலை 2020 (08:44 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.

சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது லாக்டவுன் நேரத்தில் என்கிட்ட மோதாதே சீசன் 2 மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் புகழ் காமெடி செய்யவில்லை என்று டிடி அவரை கண்டபடி கலாய்த்து திட்டிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த தீனாவிடம் இவரை வெளியே அனுப்பு என டிடி சொன்னதும் தீனா புகழை அடிக்கிறேன் என கூறி டிடியின் கன்னத்தில் பளார்னு ஒரு அரை விட்டார். இதோ அந்த வீடியோ

என்ன தம்பி தீனா.. ரொம்ப நாள் பிளான் போலயே?!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்