தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.
இந்நிலையில் தற்ப்போது தவறுதலாக தன் புருவத்தை ஷேவ் செய்துகொண்டதாக கூறி ஷாக்கிங் போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த போட்டோவை எடிட்டிங் ஆப் மூலம் அவர் அப்படி செய்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் உங்களிடம் பிடித்ததே "தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் இந்த பக்குவம் தான்" அவரை பாராட்டி வருகின்றனர்.