‘தர்மதுரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நான்காவது முறையாக நடிக்க உள்ளார்.
இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்த ‘இடம் பொருள் ஏவல்’ படம், இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால், மூன்றாவதாக இணைந்த ‘தர்மதுரை’, 100 நாட்கள் ஓடியது.
இந்நிலையில், நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படத்துக்கு, ‘மாமனிதன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தயாரித்துவரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அடுத்ததாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜாவும், யுவனும் இணைந்து இசையமைக்கின்றனர் என்ற பேச்சு அடிபடுகிறது.